தமிழ்நாட்டில் இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா ? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் பிரசாரத்தில் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. நீட் தேர்வின் பின் விளைவுகள் அறிவதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பாண்டு நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராக வேண்டுமா? வேண்டாமா என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி கொடுத்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
SBI ATM New Rules : பணம் எடுப்பதற்கு புதிய விதியை அறிவித்த எஸ்பிஐ - முழு விவரம்!
முன்னதாக, நீட் தேர்வு தொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நீட் தேர்விற்கான பயிற்சி அரசு பள்ளிகளில் தொடர்ந்து கொடுக்கப்படும். மத்திய அரசு நீட் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு அரசு பள்ளிகளில் பயிற்சியும் நடத்தப்பட்டதாகவும், நீட் தேர்விற்கான பயிற்சியை அரசு பள்ளியில் நடத்துவதில் எந்த குழப்பமும் எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர் செல்வத்துக்கு தேவையில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வுக்கான நடைமுறை இந்த நிமிடம் வரை உள்ளன இன்னும் விலக்கு கிடைக்கவில்லை. தேர்வு நடைமுறை உள்ளதால் வழக்கம்போல் மாணவர்கள் பயிற்சி எடுப்பதே சிறந்தது” என்று கூறினார்.
கொரோனா இரண்டாவது அலையால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். பொதுத்தேர்வை ரத்து செய்ததைபோல், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடத்த தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Class 12 Evaluation: ப்ளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி? - அரசு அறிவிப்பு