தமிழ்நாடு  சட்டப்பேரவை நிறைவேற்றிய அனுப்பிய நீட் விலக்கு  மசோதா தொடர்பாக குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு  விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.




அதற்கு குடியரசுத்தலைவர் பதிலளித்துள்ளார். நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு குடியரசுத்தலைவர் பதிலளித்துள்ளார்.




நீட் தேர்வு:


மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.


இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தது. ஆனால், அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. 


அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, மீண்டும் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற ஆளுநர் மூலம் குடியரசுத் அனுப்பப்பட்டது.


இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.


இதற்கு, நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு குடியரசுத்தலைவர் பதிலளித்துள்ளார்.


இதையும் படிக்க: CJI on Neet: நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள்; அநீதி இழைக்கப்படும்போது தலையிடுவது நீதிமன்றத்தின் கடமை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி