உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா பிரார்த்தனை செய்தனர். பேராலய நிர்வாகம் சார்பாக அவருக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்யப்பட்டது.

 


தேசிய மக்கள் கட்சி என்பிபி தலைவர் கான்ட்ராக்ட் சன்மா. மேகாலயாவில் முதல்வரான இவர் மேகாலயாவில் நடைபெற்ற தேர்தலில்  26 இடங்களை வென்று அசத்தினார். கான்ராட் கே சன்மா மற்ற கேபினட் அமைச்சர்களுடன் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள இவருக்கு அப்போது சபாநாயகர் தி மோதி டி ஷிரா பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

இந்த நிலையில் நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி  பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் இன்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். நேற்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மேகாலய முதல்வர், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகைதந்து அங்கிருந்து சாலை மார்கமாக இன்று வேளாங்கண்ணி வருகை புரிந்தார்.  இன்று காலை தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வர் மாதாவை தரிசனம் செய்து அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.



 

முன்னதாக பேராலயம் வந்த மேகாலயா முதல்வருக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.



 

அதனை தொடர்ந்து பிரார்த்தனையை முடித்த மேகாலயா முதல்வர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து, விமானம் மூலம் பெங்களூர் செல்ல இருக்கிறார். மேகாலயா மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.