12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மிகவும் பிரபலமான அரிய மேட்டுக்குறிஞ்சி மலர்கள் மேட்டுக்குறிஞ்சி, நீலக்குறிஞ்சியை விட அழகானது. மேலும் 1,000 முதல் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள இடுக்கிமலை புல்வெளிகள் அரிதாக இருப்பதால், இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கேரளாவின் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பசுமையான மலைகளில் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள், தொலைதூர பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மிகவும் பிரபலமான நீலக்குறிஞ்சியை போலல்லாமல், இந்த மேட்டுக்குறிஞ்சி மலர்கள், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.


ஸ்ட்ரோபிலாந்தஸ் செசிலிஸ் என்று அழைக்கப்படும் மிகவும் அழகான மேட்டுக்குறிஞ்சி, இப்போது இடுக்கி மாவட்த்தில்
பருத்தும்பாறை, ராமக்கல்மேடு, வாகமன் மற்றும் கட்டப்பனாவில் உள்ள கல்யாணந்தண்டு மலை உச்சிகளில் பூத்துக் குலுங்குகின்றன. 


காடுகளில் பூக்கும் பூக்களை வனத்துறை பாதுகாக்கும் அதே வேளையில், தனியார் பகுதிகளில் பூக்கும் மேட்டுக்குறிஞ்சியை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. குறிஞ்சி பூக்கும் செய்தி வெளியானதில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு திரளாக வரத் தொடங்கியுள்ளனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பறிக்கின்றனர், இது அதன்  முழு அழகையும் கெடுக்கின்றது


இதனால் குறிஞ்சியைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பலாம். மாவட்ட  நிர்வாகம் பூக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.