நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13 கடைசித் தேதி ஆகும். இதில் எப்படி  பங்குபெறுவது என்று பார்க்கலாம். 

2022- 2023ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின்போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாகத் தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை ஒட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொது மக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்துகொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும் வகையில்  பிரம்மாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது  பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத் துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். 

கலைக் குழுக்கள் பின்வரும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.      

1.     தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

2.   ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.

3.   தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

வ.எண் மண்டலம் மாவட்டங்கள் முகவரி தொடர்பு எண்
1. காஞ்சிபுரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

உதவி இயக்குநர்,

மண்டலக் கலை பண்பாட்டு மையம்              சதாவரம், கோட்டை காவல் (கிராமம்),                சின்ன காஞ்சிபுரம்,                              ஓரிக்கை (அஞ்சல்),                          காஞ்சிபுரம் - 631502.
தொலைபேசி : 044 - 27269148.

2. சேலம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம், தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்), சேலம் - 636302.
தொலைபேசி : 0427 - 2386197

3. தஞ்சாவூர் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம்,              மண்டல கயிறு வாரியம் அலுவலகம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி அஞ்சல்,
தஞ்சாவூர் - 613403,
தொலைபேசி : 04362 - 232252

4. திருச்சிராபள்ளி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர்

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம், எண் 32, நைட்சாயில் டெப்போ சாலை, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006.
தொலைபேசி :0431 - 2434122

5. மதுரை மதுரை, திண்டுகல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம்,
மதுரை - 625002,
தொலைபேசி : 0452 - 2566420

6. திருநெல்வேலி திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு,
திருநெல்வேலி - 627007.
தொலைபேசி : 0462 - 2553890

7. கோயம்புத்தூர் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர்

உதவி இயக்குநர்

மண்டலக் கலை பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகம், செட்டிபாளையம் பிரிவு ரோடு, மலுமிச்சம்பட்டி அஞ்சல்,
கோயம்புத்தூர் - 640150,
தொலைபேசி : 0422 - 2610290