கார்த்திகை என்றாலே சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.  தீபாவளி பண்டிகை முடிவுற்று வருவதால் கார்த்திகை மாத தீபத் திருநாள் விழா ஆலயங்களில் அகல் விளக்கு ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.


 




இந்நிலையில், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே தள்ளுவண்டியில் அகல் விளக்கு விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்கள் தங்களது இல்லத்திலும் ஆலயத்திலும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்த இருப்பதால் இன்று முதல் விளக்கு வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விளக்கு ஒன்று ரூபாய் ஒன்று முதல் மூன்று வரை விற்பனையாகி வருகிறது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்றுக் கொண்டாடுவது வழக்கம்.  கரூர் மாநகரில் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.


கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்றுக் கொண்டாடுவது வழக்கம். கரூர் மாநகரில் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.




 




திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


திருவண்ணாமலையில் நாளை  நடைபெறும் தீபத்திருநாள் மற்றும் ஏழாம் தேதி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டலம் சார்பில் மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல பொது மேலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. டிசம்பர் 6ஆம் தேதி அன்று திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா மற்றும் ஏழாம் தேதி திருவண்ணாமலை கிரிவலம் நடைபெற உள்ளது. எனவே தமிழ்நாடு போக்குவரத்து கழக கரூர் மண்டலம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க வசதியாக அவர்களின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கூடுதல் சிறப்பு பேருந்துகள் பயணிகள் வருகைக்கு ஏற்ப இயக்கப்பட உள்ளதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இந்த கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.