தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளுடன் கால்நடை மேய்ச்சல் போராட்டத்தில் பங்கேற்றார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி இந்தப் போராட்டத்தை நடத்தியது.
குழாய திறந்தா பால் வருமா..?
கால்நடை மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் தடையை கண்டித்து, தமிழர் சமூகத்தில் கால்நடைகளின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை வலியுறுத்தி சீமான் உரையாற்றினார்.
இதற்கிடையே, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தின் போது வனத்துறையின் தடுப்புகளை நாம் தமிழர் கட்சியினர், அகற்றி தூக்கிவீசினர். வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாடுகளை மலையேற்றி போராட்டம் நடத்தினர்.
மாடு மேய்க்கும் போராட்டத்தில் இறங்கிய சீமான்:
பின்னர் பேசிய சீமான், "பால் எங்க இருந்து வரும் குழாய திறந்தா வருமா..? திடீர்னு தடை விதிச்சா நாங்க எங்க போய் மாடு மேய்க்கிறது..? வெடி வெடிச்சி மலைய நொறுக்கும் போது வனவிலங்குகள் பாதிக்கலயா..? கால்நடைத்துறை, பால்வளத்துறை எதற்காக இருக்கு..? மீண்டும் வருவேன்..!
கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கிறது. அங்கே தீப்பற்றி எரிந்து விடக்கூடாது என்பதற்காக 100 மாடுகளை விட்டு புற்களை மேய விடுகிறார்கள். அவர்களுக்கு அறிவு இருக்கிறது. பொருளாதாரம் எங்க இருக்குன்னு தெரியாம சாராயத்தை வித்து சுடுகாடு ஆக்கிட்டாங்க. இவங்களுக்கு அறிவாளின்னு பேரு" என்றார்.
இதையும் படிக்க: US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்