ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர் ஒருவர் சீமானிடம் ஐ லவ் யூ என சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார்.  இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.






திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் களத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


பலத்த பாதுகாப்பு 


இதனிடையே தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்வடைந்தது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ள நிலையில், அதனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ள 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 


மக்கள் ஆதரவு யாருக்கு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும்  ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமானிடம் தொண்டர் ஒருவர் ஐ லவ் யூ என சொன்ன வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் ஐ லவ் யூ என சொன்னதும், சீமான் எதுவும் யோசிக்காமல் “மீ டூ” என சொன்னார். இதனால் சுற்றியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். உடனே  சீமான், “அவர் அன்பை தந்தார். அன்பை திரும்ப கொடுத்தேன். நெல்லை விதைத்தால் நெல்லு முளைக்கும். புல்லு முளைக்காது. அதேபோல் வம்பை விதைத்தால் வம்பு முளைக்கும்” என தனது ஸ்டைலில் அந்த வீடியோவில் சீமான் பேசியுள்ளார். 


மேலும் படிக்க: Erode East By Election : நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ஒரு பார்வை..!