கன்றுகளுடன் ஏரியில் மர்மமாக இறந்த பசுக்கள்: விழுப்புரம் அருகே அதிர்ச்சி!

விழுப்புரம் அருகே 30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் கன்றுகளுடன் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்

Continues below advertisement

விழுப்புரம் அருகே 30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் கன்றுகளுடன் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் நோய் தொற்று பரவும் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர், இதனால் அப்பகுதியில் தீவிர நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணைக்கட்டு சாலையின் அருகே உள்ள வழுதரெட்டி, திருப்பசாவடி மேடு, உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளைநிலங்களுக்கு பாசன வசதி பெறும் மிக பெரிய ஏரிதான் வழுதரெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏரி பகுதியாகும். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அதிகமான நீர் வழுதரெட்டி ஏரிக்கு இன்னும் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் அதனை பார்க்க வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் ஏரியின் நீர் கொள்ளளவை பார்க்க சென்ற போது முப்பதுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பசு மாடுகள் மற்றும் கன்றுகளுடன் கொத்து கொத்தாக இறந்த நிலையில் நீரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இந்தப் ஏரி பகுதியின் மற்றொரு  மூளையில் நீர் வெளியேறும் இடத்தில் கிராம மக்கள் குளிக்கவும் செய்கின்றனர். மேலும் அதனை சுற்றி துர்நாற்றம் வீசுவதோடு அந்த இறந்த மாடுகளை நாய்கள் சாப்பிட்டு வருகிறது.  இறந்த மாடுகளை சாப்பிட்ட நாய்கள் கிராமத்திற்குள் இருக்கும் குழந்தைகளிடம் விளையாடவும் செய்கிறது.


எனவே மாவட்ட நிர்வாகமும் கால்நடைத் துறையும் இந்த ஏரியில் இருக்கும் பசுமாடுகள் வைரஸ் நோயால் தாக்கப்பட்டு இருந்தனவா இல்லை வேறு ஏதாவது பசுமாடு வளர்க்கும் பண்ணையிலிருந்து கொண்டுவரப்பட்டு வீசி விட்டு சென்றார்களா என இறந்த பசுமாடுகளை பிரேத பரிசோதனை செய்து சுகாதார சீர்கேடு ஆவதற்கு முன்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Sponsored Links by Taboola