மாநிலங்களவையிலுள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 12 எம்பிக்கள் எப்போதும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது நியமன எம்பிக்களாக 5 பேர் உள்ள நிலையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 4 இடங்களுக்கு தற்போது மத்திய அரசு நியமன எம்பிக்களை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா இடம்பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 






இந்நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், “இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினால், அவரது தகுதியை அது குறைக்கும். இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னாவே கொடுக்கலாம்..!” எனக் கூறியிருந்தது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


முன்னதாக இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “தலைமுறைகளைக் கடந்து   
 இளையராஜா அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன.


 






அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.” எனப் பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தவிர மத்திய அமைச்சர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இளையராஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண