இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரியைச் சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று புதுச்சேரி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணகுமார், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கடற்கரை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.
மேலும் இளையராஜா அவர்கள் ஒரு மிகப்பெரிய சாதனையாளர். தன்னுடைய திறமையின் மூலமாக உலகம் முழுவதுமுள்ள இசை ஆர்வலர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டவர். இப்படி ஒரு இசை மாமேதைக்குப் பிரதமர் நரேந்திர மோதி இளையராஜாவைக் கௌரவப்படுத்தும் விதமாக அவருக்கு நியமன ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய ஒரு பெருமை. தமிழ் மண்ணிற்குக் கிடைத்த அங்கீகாரம் தமிழ் நாட்டிற்குக் கிடைத்த கௌரவமாக நான் பார்க்கிறேன்," என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்