கரூர் புத்தக திருவிழா – 2022 -  4 ஆம் நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் மோகன சுந்தரத்தின் “தனமும் இன்பமும் வேண்டும்“ மற்றும் கோபிநாத்தின் “எது புரிந்தால் வாழ்க்கை புரியும்“ நிகழ்ச்சி  நடைபெற்றது. கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர், சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இவ்விழாவிற்கு  திட்ட, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கரூர்  ப.மந்திராசலம் தலைமை வகித்தார்கள். நிர்வாக இயக்குநர்கள், வி.கே.ஏ.மில்க் & மில்க் புராடக்ட்ஸ்  வி.கே.ஏ.சாமியப்பன், திரு.வி.கே.ஏ.கருப்பண்ணன் முன்னிலை வகித்தார்கள்.





முதலமைச்சர் ஆணைகிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை)  நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி (19.08.2022) திறந்து வைத்து பார்வையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம்  நாள் நிகழ்ச்சியாக இன்று சிந்தனை அரங்கத்தில் மோகன சுந்தரம் “தனமும் இன்பமும் வேண்டும் “மற்றும் நீயா..நானா..?” கோபிநாத் “எது புரிந்தால் வாழ்க்கை  புரியும்“ என்ற தலைப்பில் நிகழ்ச்சி, விமரிசையாக  நடைபெற்றது.




முன்னதாக புத்தக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளில் குழந்தைகளுக்கான நூல்கள், இலக்கியம், போட்டித்தேர்வுகள், வரலாறு, முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன, தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அதிக அளவிலான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டார்கள். மேலும்,  நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணிவரை பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் ஶ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை  மேல்நிலைப்பள்ளி,  கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மற்றும் கரூர் CSI பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.




முன்னதாக செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சு.பாலகிருஷ்ணன் வரவேற்றும், நிறைவாக கரூர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கு.அன்புமணி நன்றி  தெரிவித்தும்  பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தண்டயுதபாணி, சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாமன்ற உறுப்பினர் வசுமதி, மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.