வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடையின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்ததது. இந்நிலையில் மாநிலத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து மதுரை, நெல்லை மற்றும் குமரி என தென் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.


சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மதுரை மக்களுக்கு மழை புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


School Leave : கனமழை அபாயம்...! நாகப்பட்டினத்தில் 1-9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை...!


இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.


அதேபோல சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும், நகரின் வெப்பநிலை 35-27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவித்திருந்தது.


மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தமிழக கடரோப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


TamilNadu Rains: தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண