நாளை தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதனை அடுத்து, நாளை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்திராயிருப்பு (விருதுநகர்) 12 செ.மீ., கூடலூர் (தேனி) 10, பேரையூர் (மதுரை), மீமிசல், (புதுக்கோட்டை), வைகை அணை தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.


பிற முக்கியச் செய்திகள்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண