தமிழ் மொழி எப்போதும் அனைத்து மக்களையும் வாழ வைக்கும் என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 


வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


’யாதும் ஊரே; யாரும் கேளிர்’ என்ற கணியன் பூங்கொன்றனார் எழுதியதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்கினார்.தொல்லியல் ஆய்வுகளை அரசு ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்திக்தான் என்று தெரிவித்துள்ளார்.


FeTNA அமைப்புடன் (Federation of Tamil Sangams of North America) இணைந்து தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறையின் கீழ் செயல்படும் டான்செட் நிறுவனம் இணைந்து புத்தொழில் மாநாட்டை நடத்தியது. இதன்மூலம் அமெரிக்க தமிழ் நிதியம் அமைப்பின் முலம் ரூ.10 கோடி அளவிற்கு தமிழ்நாடு தொடக்க நிலை புத்தொழி நிறுவங்களுக்கு முதலீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். 


சாக்ரமெண்டோ தமிழ் மன்றம்36-ஆவது தமிழ்விழாவில் முதலமைச்சரின் உரை:


” FeTNA- கூடி களையும் அமைப்பாக இல்லாமல், கூடி உழைக்கும் அமைப்பாக உள்ளது. தமிழ் எப்போதும் வாழ வைக்கும்; 


’தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!


இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
 
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்’


என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடினார். தமிழ் என்பது நமக்கு மொழி மட்டுமல்ல; அமுதமாக, உயிராக, நமக்கு வாழ் வைக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்ட களத்திற்கு வாளாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் என்றால் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை பெயராக சூடும் வழக்கத்திற்கு முன்னோடி தமிழர்கள்தான்.தமிழ்செல்வன், தமிழரசன், தமிழ்செல்வி என்று பெயர் கொண்டவர்கள் 18 வயதுக்கு மேல் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கணக்கிட்டு சொல்லியிருக்கிறார். குழந்தைகள் பெயர்களை கணக்கிட்டால் இது இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. மொழிக்காக தேக்குமர தேகத்தை தீக்கு இரையாக கொடுத்தவர்கல் நாம்; கடல் கட்ந்து வந்தும் தமிழுக்காக விழா எடுத்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், மொழி என்பது நம்மை பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை. இரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் கூடியிருக்கிறோம். “ தொன்மைத் தமிழரின் பெருமை.” என்ற தலைப்பில் மாநாடு பாராட்டிற்குரியது. 


உலகின் தோற்றத்தை கணிக்க முடியாததுமாதிரி, தமிழின் தோற்றதையும், தமிழினத்தின் தோற்றத்தையும் கணிக்க முடியாது கணிக்க முடியாத அளவிற்கு தொன்மையானது. " என்று பேசினார்.