சென்னை அம்பத்தூர் ஓ.டி அருகே குடியிருப்பு பகுதியில், பெரிய அளவில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், உண்மையாகவே அந்த இடத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறதா என நோட்டமிட்டு, பாலியல் தொழில் அந்த இடத்தில் நடைபெறுவதை உறுதி செய்தனர். குறிப்பாக அந்த பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து குறிப்பிடப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இளம் பெண்கள்
காவல்துறையினர் நடத்திய சோதனையில் அந்த குடியிருப்பு பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் , மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை மீட்டனர். இது தொடர்பாக முதற்கட்டமாக திருநெல்வேலி சேர்ந்த ரமேஷ் மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து இருவரிடம் தனிப்பட போலீசார், நடத்திய தீவிர விசாரணையில் பல மாதங்களாக சிறுமி மற்றும் பெண்கள் இருவரை அந்த இடத்தில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்
இதனை அடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர், இருவரையும் கைது செய்த அம்பத்தூர் போலீசார் அவர்கள் மீது விபச்சார வழக்கு மற்றும் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததால், போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜபடுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இருந்தும் இருவர் மட்டுமே இந்த பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தவில்லை என போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொலைபேசி உரையாடல் மூலம், கண்டுபிடித்தனர்.
பலரிடம் தொடர்பில்
குறிப்பாக வாட்ஸ் அப் குழு வாயிலாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி அந்த வாட்ஸ் அப் குழுக்களில், பெண்களின் புகைப்படத்தை பகிர்ந்து, கஸ்டமர்களை வரவைப்பதற்கு என பல புரோக்கர்கள் இருந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் வாட்ஸப் வாயிலாக பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்டு வந்த, பலரிடம் தொடர்பில் இருந்து உள்ளார்.
இதன் அடிப்படையில் வாட்ஸ் அப் குழு வாயிலாக புரோக்கர்களாக செயல்பட்டு வந்த அய்யா குட்டி ,வீர மனோகர், மீரான் ,ராஜா, நாகேந்திரன், முத்து நாதன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீதும் விபச்சார வழக்கு மற்றும் போக்சோ ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் . மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
whatsapp குழு செயல்பட்டது எப்படி ?
பெண்கள் புகைப்படங்களை, சம்பந்தப்பட்ட இருவரும் புரோக்கர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். புரோக்கர்கள் பல ஆபாச வாட்ஸ் அப் குழுக்கள், இளைஞர்கள் ஆகியோர்களிடம் தொடர்பில் இருப்பார்கள். அதே போன்று டெலிகிராமிலும் குழுக்கள் மற்றும் சேனல்கள் வைத்திருக்கிறார்கள். அந்த குழுக்களில் பெண்களின் புகைப்படங்கள் பகிரப்படும். விலை என்பது குழுக்களில் தெரிவிக்காமல் தனியாகவே தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து, புரோக்கர்கள் பெண்கள் வேண்டும் என்பவர்களின் , வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி எண்களை பாலியல் தொழிலை நடத்தும் நபர்களிடம் அனுப்பி வைப்பார். இதனை அடுத்து பெண்கள் பிடித்துள்ளது விலையும் சரி என்று சொன்னார்கள் என்றால் ,அவர்களுக்கு பாலியல் தொழில் நடைபெறும் இடத்தில் லொகேஷன் அனுப்பி வைக்கப்படும். இதனை அடுத்து புரோக்கர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும்.