டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன். காவடி தூக்கப்போகவில்லை என எம்.பி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும்,பாஜக மற்றும்  RSS உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது திமுக என, எம்.பி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

Continues below advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது. மக்களவை உறுப்பினர் திருமாவளவனின் 60தாவது பிறந்த நாள் என்பதால், விசிக மற்றும் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த, கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு உரையாற்றினார். அவரது உரையில், தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு தம்பி திருமாவளவன் உதாரணம். தேர்தல் வரும் போகும், இயக்கங்களும் கொள்கைகளும் எப்போதும் இருக்கும். நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி அதனை யாராலும் பிரிக்க முடியாது. பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக மற்றும்  RSS உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தமிழ்நாடு அரசு சனாதனவாதிகளால் அதிகப்படியான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது. 

பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட கருத்துக்களை நிறைவேற்றவே ஆட்சி செய்கிறோம். இந்த விழாவை முடித்து விட்டு டெல்லிக்கு செல்லவிருக்கிறேன். டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன், காவடி தூக்கப் போகவில்லை எனவும் அதிரடியாக கூறியுள்ளார். திமுகவின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். விசிகவிற்கும், திமுகவிற்கும் உள்ள உறவு தாய்-பிள்ளை உறவு, இது எப்போதும் தொடரும். பெரியார், கலைஞர் 95 வயதுவரை  வாழ்ந்து மக்கள் பணி ஆற்றினர், அவ்வகையில் திருமாவளவனும் மக்கள் பணி செய்யவேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.