தமிழ்நாடு அரசின் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளைப் பொறுப்பேற்க உள்ளது. இந்த நிலையில் துறைவாரியாகப் பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியானது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு முயற்சி, சிறப்புத்திட்டச் செயலாக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்கிறார்.






பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சராக க.பொன்முடி, நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு, தொழிற்துறைக்கு தங்கம் தென்னரசு, சட்டத்துறைக்கு எஸ். ரகுபதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கயல்விழி செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்வு நாளை 7 மே காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கிறது. மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அறிவித்து நேற்று ஆளுநர் மாளிகை ஊடக அறிவிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Also read: பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே கண்டுகளியுங்கள் - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்..