விழுப்புரத்தில், கூவாகத்திருவிழாவினை முன்னிட்டு, நடைபெற்ற மிஸ் திருநங்கை 2023 நிகழ்ச்சியில், மூத்த திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசாக கேடயத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில்,


முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் திருநங்கைகள் என பெயர்ச்சூட்டி, திருநங்கைகளுக்கான நலவாரியத்தினை உருவாக்கி, அவர்களுக்கு தேவையான குடும்ப அட்டை, அடையாள அட்டை, சுயதொழில் தொடங்கிட வங்கிக் கடனுதவி, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தொகை வழங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வகுத்த வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருநங்கைகளுக்கான ஓய்வூதியத்தொகையினை ரூ.1,000/- த்திலிருந்து ரூ.1,500/- ஆக உயர்த்தி திருநங்கைகள் சமூகத்தில் கண்ணியத்துடனும், சுதந்திரமாகவும் வாழ்ந்திட வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.


மேலும், அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு, திருநங்கைகளுக்கான சுய உதவிக்குழு, சமத்துவபுரத்தில் வீடு, அரசுப் பேருந்தில் இலவச பயணம், தொழிற்பயிற்சி, மாநில திட்டக்குழுவில் திருநங்கை உறுப்பினர்கள், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு, திருநங்கைகளுக்கு இலவச பெயர் மாற்றம், கல்லூரிகளில் இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு போன்றவற்றினை அறிவித்து திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை காத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் திருநங்கைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.


கூவாகத் திருவிழா ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்து கூவாகத்திருவிழாவில் பங்கேற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் நடைபெறும் கூவாகத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், நடிகை செல்வி வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண