Commercial Gas: மாதத்தின் முதல் நாள்.. விலையில் மாற்றம் கண்ட வணிக சிலிண்டர்..! குறைந்ததா விலை..?

சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.

Continues below advertisement

சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள். ஏப்ரல் 1ம் தேதி ரூ. 2,192. 50 ஆக இருந்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 2,021. 50 ஆக குறைந்துள்ளது. 

Continues below advertisement

மாதந்தோறும் முதல் நாளில் சமையல் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வபோது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு வந்தது. இதையடுத்து, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று ரூ.2,192. 50 லிருந்து ரூ. 2,021. 50 ஆக குறைந்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola