கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்புவது போன்று, போலியாக தயாரித்து, தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு வீடியோவை மாரிதாஸ் என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி போலியானது, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த தனியார் தொலைக்காட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தலைமையில் செயல்படும் சமூக விரோத கும்பல் வேண்டுமென்று பொய் செய்தியை பரப்பி உள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் மேற்படி மாரிதாஸ் மற்றும் அந்த கும்பல் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் மதக் கலவரங்களையும் ஜாதி கலவரங்களையும் தூண்டிவிடும் நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பான தகவல்களை ட்வீட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாகவும், வழக்கமாகவும் கொண்டு உள்ளனர். மேலும் சமூக விரோதிகள், சிலர் மாரிதாஸ் தலைமையில் ஒரு குழுவாக செயல்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீது ஆதாரமில்லாத பொய் செய்திகளையும் குற்றசாட்டுகளையும் கூறி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலங்காலமாக ஒன்றுமையுடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் பிற மத மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதை இவர்களது கடந்த கால ட்விட்டர் மற்றும் யூடியூப் பதிவுகள், வீடியோக்கள் மூலம் புரிந்துக்கொள்ள முடியும்,
தமிழக மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராது ஓய்வின்றி மக்கள் பணியாற்றி கொண்டிருக்கும் மாண்புமிகு நிதி மற்றும் மனித மேம்பாட்டுத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பின்னரும் தவறான செய்தி பரப்பும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி அவரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கவும் அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் மாரிதாஸ் மற்றும் அவரின் குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், நாராயணன், ராஜ்குமார், முகமது ரபி, மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், மோகன், கிருஷ்ணா, மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித் குமார், தர்மலிங்கம், ஞானவேல், சிவா நகர ஒருங்கிணைப்பாளர்கள் தமிழன், அருள், மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!