நாமக்கல் மாவட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் கரூர் அர்சு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் பார்வையிட்டார்.


 


 




 


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், 


நாமக்கல் மாவட்டத்தின் கரும்பு ஆலை அருகில் சிமெண்ட் சீட்டுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அறையில் தொழிலாளர்கள் தங்கி இருந்திருக்கிறார்கள். அந்த அறையில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு இருக்கிறது.  அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் ராகேஷ் (19), சுகிராம் (28), அஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய நான்கு நபர்கள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தீக்காயம் அடைந்த அந்த நான்கு நபர்களும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால்  கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நான்கு நபர்களுக்கும் தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நான்கு பேரையும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை இணைந்து அக்கறையோடு நல்லதொரு சிகிச்சையை அளித்து வருகிறார்கள். நான்கு நபர்களும் நல்ல பாதுகாப்புடன் இருக்கிறார்கள் அவர்களின் உறவினர்களுக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு அந்த நான்கு நபர்களுக்கும் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் எந்த மாதிரியான மருந்துகள் தேவைப்படுகிறது அவை அனைத்தையும் பெற்று உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் விசாரணையின் அடிப்படையில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும் “ எனத் தெரிவித்தார்.


 




 


இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.தமோதரன்; கூடுதல் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (திருச்சி) ஜெயபாலன், தொழிற்சாலை கூடுதல் இயக்குநர் பூங்கோடி, தொழிலாளர் இணை ஆணையர்கள் திண்டுக்கல்  என்.கோவிந்தன், சேலம் திரு.ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர்கள் ராமராஜ், (சபாதி) ஹேமலதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உடபட பலர் கலந்து கொண்டனர் .