Udhayanithi Stalin: சென்னையில் 2,364 புதிய குடியிருப்புகள்.. அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி

சென்னையில் கொய்யாத்தோப்பு, சேத்துப்பட்டு மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் புதியதாக கட்டப்பட உள்ள 2 ஆயிரத்து 364 குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Continues below advertisement

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் ரூ.81.20 கோடி மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் திட்டப்பகுதியில் ரூ4,130 கோடி மதிப்பீட்டில் 240 புதிய குடியிருப்புகளுக்கும் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ 307.24 கோடி மதிப்பீட்டில் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஆக மொத்தம் 3 திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் 2364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Continues below advertisement

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்:

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது, ”முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் 1973 ஆம் ஆண்டு 325 சதுர அடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்ட 302 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது.

அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 61 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 437 சதுர அடியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகளுக்கும், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் 1973 ஆம் ஆண்டு 326 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 224 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 41 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுர அடியில் தூண் மற்றும் 6 தளங்களுடன் 240 புதிய குடியிருப்புகளுக்கும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 1974ஆம் ஆண்டு 213 சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட 1476 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது.

அடிக்கல்:

அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 307 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 396 சதுர அடியில் தூண் மற்றும் 2 தளங்களுடன் 1800 புதிய குடியிருப்புகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 409.74 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக 2364 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. 3 திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் 2364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது” என பேசினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட இடியும் தருவாயில் உள்ள பழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் 27,138 வீடுகளும் மற்றும் பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் மொத்தம் 30,492 பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15000 புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

18 மாதத்தில் பணிகள் நிறைவு:

அதன்படி 30 திட்டப்பகுதிகளில் 7582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1827.97 கோடி மதிப்பீட்டில் 9,522 வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில் 5 திட்டப்பகுதிகளில் ரூ.196.27 கோடி மதிப்பீட்டில் 1147 புதிய குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 3 திட்டப்பகுதிகளில் ரூ.40974 கோடி மதிப்பீட்டில் 2364 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 8 திட்டப்பகுதிகளில் ரூ.006.01 கோடி மதிப்பீட்டில் 3511 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 திட்டப்பகுதிகளில் 1,02,187 கோடி மதிப்பீட்டில் 6011 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

இப்புதிய குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. 18 மாதத்தில் பணிகள் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இங்கு கட்டப்படும். குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola