சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அம்மன் கோவில் பூட்டு உடைத்து துணிகர கொள்ளை சம்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேவி கருமாரியம்மன் ஆலயம் 

 

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மகேந்திரா சிட்டி கூட்ரோடு அருகே அப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம் இருந்து வருகிறது. இந்த ஆலயத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பகத்சிங் நகர் பகுதியை சேர்ந்த செல்வா என்பவர் தினமும் ஆலயத்திற்கு வந்து கோவிலை சுத்தம் செய்வது வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.

 

 


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அம்மன் கோவில் பூட்டு உடைத்து துணிகர கொள்ளை 


 

அதிர்ச்சி 

 

அந்த வகையில் நேற்று மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் பூஜைகள் அனைத்தும் முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து இன்று காலை 6 மணி அளவில் வழக்கம் போல கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்து பார்த்தபொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

100-க்கு அழைத்து

 

கோவிலில் ஏதாவது பொருட்கள் திருடு போயிருக்கிறதா என்று பார்த்த பொழுது கோவிலில் இருந்த ஐம்பொன் சிலை மற்றும் காமாட்சி அம்மன் விளக்கு திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டியல் 100-க்கு அழைத்து பொருள் திருடப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

 


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அம்மன் கோவில் பூட்டு உடைத்து துணிகர கொள்ளை 


 

சிசிடிவி காட்சி

 

இதனை அடுத்து மறைமலைநகர் காவலருக்கு, இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மறைமலைநகர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரைவழிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது

 

24 மணி நேரமும் வாகனம் செல்லக்கூடிய, சென்னை - திருச்சி பிரதான சாலையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று, இருப்பது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மறைமலைநகர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருவதாகவும், அதேபோன்று வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பெரும்பாலான வழிப்பறி சம்பவங்களுக்கு போலீசார் முறையான எஃப்.ஐ.ஆர் போடுவதில்லை எனவும், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை, பொருள் காணாமல் போனதாக எஃப்.ஐ.ஆர் போடுவதும், தொடர்கடையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அம்மன் கோவில் பூட்டு உடைத்து துணிகர கொள்ளை 


 

பொதுமக்கள் அதிர்ச்சி

 

முறையாக இரவு நேரங்களில் ரோந்து வாகனம் சென்று இருந்தால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். அதேபோன்று சென்னை புறநகர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை முறையாக செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.