வேலைவாய்ப்பில் சமமற்ற நாட்டில் பொது நுழைவுத் தேர்வு சமமான வாய்ப்பை வழங்காது: அமைச்சர் பொன்முடி

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் யுஜிசி உள்ளிட்ட உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் யுஜிசி உள்ளிட்ட உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்தது. 

Continues below advertisement

இந்தநிலையில், பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், டெல்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யூ போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு வைப்பதால் தமிழ்நாடு மாணவர்களின் சேர்க்கை பெருமளவு குறையும். சமூக, பொருளாதார வேலை வாய்ப்பில் சமமற்ற வளர்ச்சி உள்ள நாட்டில் பொது நுழைவுத் தேர்வு சமமான வாய்ப்பை வழங்காது எனவும் தெரிவித்துள்ளார். 

2010-ல் சியூசெட்

முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே 2010-ம் ஆண்டில் சியூசெட் எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Central Universities Common Entrance Test) அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அதை அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழலில் புதிய கல்விக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மத்திய பாஜக அரசின் சார்பில் CUET தேர்வு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், இந்த நுழைவுத் தேர்வு முறையைப்  பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற நுழைவுத் தேர்வுகள்

ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட சில கலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, சிஏ படிப்புக்கு ICAI நுழைவுத் தேர்வும், சட்டப் படிப்புகளுக்கு  CLAT நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola