மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளார்களை சந்தி்த்து பேசியபோது..,” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு வரும் மார் 30, 31ஆம் ஏப் -1ஆம் தேதி நடைபெறவுள்ளது, மத்திய பா.ஜ.க அரசு கற்பனை பண்ண முடியாத அளவிற்கு பன்முகை தன்மையை சீரிழித்துவருகின்றனர், கல்வியை மத்திய பட்டியலில் மாற்றும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, தமிழக ஆளுநர் பல்கலை வேந்தர்களாக இருக்க கூடாது, துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் அதற்கான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் எனவும், ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது , இது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய பாஜகவிற்கு எதிராக தமிழக மக்களை திரட்டவுள்ளோம், சின்ன சின்ன பிரச்னைகளை எல்லாம் பா.ஜ.க பெரிதாக்கி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது, மதமாற்றம் என்ற இல்லாத ஒன்றை பேசி பிரச்னையாக பா.ஜ.க மாற்றுகிறது.
தமிழகத்தில் காவி கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சிக்கிறது, கம்யூனிஸ்ட்கள் ஏன் கோயில் விழாக்களை கையில் எடுக்க கூடாது எனவும், கோவில் விழாக்களில் பண்பாட்டு தளத்தில் தலையிட்டு பாஜகவிற்கு பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக பணியாற்றவுள்ளோம், பாஜகவை எதிர்க்க திமுகவோடு இணைந்து பணியாற்றுகிறோம். மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் சிறுகுறு தொழில் அழிந்துவிட்டது, அரசுத்துறையில் அனைத்திலும் தொகுப்பூதிய அடிப்படையிலயே பணியமர்த்தும் நிலை உள்ளது - இதனால் பணி உறுதி இல்லாத நிலை உள்ளது தொழிலாளர்களின் வாழ்வாதர போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
உத்திரபிரதேச தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை தற்போது மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளனர், மொத்தமாக வாங்கினால் டீசல் விலை உயர்வு என்பதே மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படும், கடந்த ஒரு வருடத்தில் 270ரூபாய் அளவிற்கு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர்.
தேர்தல் வந்தால் மட்டும் விலை உயர்வை காட்டாமல் நடிக்கின்றனர். பொதுத்துறை தனியாருக்கு விற்பனை, எல்ஐசி பங்கு விற்பனை போன்ற பொருளாதார தாக்குதலை மத்திய பாஜக செய்கிறது , விருதுநகர் சம்பவம் மனவருத்தம் தருகிறது - காவல்துறை விரைவாக செயல்பட்டுள்ளார், பாலியல் கொடுமைக்கு முக்கிய காரணமாகும் போதை பழக்கம், போதைப்பொருள் விநியோகம், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காதல் செய்யும் இளம் காதலர்களை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும், ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், காதலர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் தற்கொலை செய்ய வேண்டாம், உங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காப்பாற்றுவோம். சாதாரண மனிதனை இந்து என்ற அடிப்படையில் மக்களை பிரித்தாளுகிறது , அதனை தடுக்கும் வகையில் பண்பாட்டுதலத்தை கிராமந்தோறும் உருவாக்க மார்க்சிஸ்ட் பாடுபடவுள்ளோம், மதசார்பு மத நல்லிணகத்தை சீரழிக்க பாஜக முயற்சிக்கிறது. கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ் கொடியை கட்டி அவர்களே விழாவை நடத்தி் தங்களது கொள்கையை நுழைக்கின்றனர், கடவுள் நம்பிக்கை, மத சார்பு மீதான நம்பிக்கை உணர்வுகளை மக்கள் மத்தியில் வளர்க்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்றுவிட்டது, பௌத்த மக்களையும், தமிழ் மக்களையும் மோத விட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணி் ஆட்சியை பிடித்ததால் இந்த நிலை உள்ளது, ஆள் தான் வித்தியாசம் ஆனால் ஆடை ஒன்று என்பது போல தான் இந்தியாவும் உள்ளது. இலங்கையை போன்று இந்தியாவிற்கும இதே நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. கோவில் விழாக்களில் புகுந்து இறை உணர்வை மத வெறியாக மாற்ற முயற்சிப்பதை தடுக்க சூழலுக்கு ஏற்ப மார்க்சிஸ்ட் செயல்படுகிறது, மதசார்பு என்ற அடிப்படை கோட்பாட்டிற்கு ஆபத்து ஏற்படும் போது அதனை காப்பாற்ற கோவில் விழாக்களில் மார்க்சிஸ்ட் தலையிட வேண்டியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai : திறந்த வெளி சிறைச்சாலையில் ஆயுள் கைதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு