தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். 


அதனை அடுத்து விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது, ”வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 


அதனைதொடர்ந்து, சட்டபேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்,



  • மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமை நிலைநாட்டப்படும்.

  • திமுக ஆட்சி செய்யும் இந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும். 

  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவிகை எடுக்கப்படும்.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள இடர்பாடுகளை மேற்கொள்ள ரூ. 37.20 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • ரூ. 84 கோடியில் காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி உள்பட 5 இடங்களில் புதிய அணைக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெறும் 


என்ற பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். 



  • 7-4-2022:  34 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை


                   42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை



  • 8-4-2022: 12- கூட்டுறவு


                 13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு



  • 9-4-20322 (சனிக்கிழமை): அரசு விடுமுறை

  • 10-4-2022(ஞாயிற்றுக்கிழலை): அரசு விடுமுறை




மேலும் படிக்க: Coimbatore: கோவையில் பாதுகாப்பு தொழில் நிறுவனம் - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண