கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அந்தப் பேட்டியில், “கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா உச்சத்தில் இருந்த  காலத்தில் செய்யப்பட்ட அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது. மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும். தங்கள் நம்பிக்கைக்காக மகப்பேற்றினை மாற்றியமைக்க முயற்சிப்பது தவறானது. சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்த அமைச்சர், மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், நீட் தேர்வு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.




முன்னதாக, ‘திமுக தேர்தல் பிரசாரத்தில் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. நீட் தேர்வின் பின் விளைவுகள் அறிவதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பாண்டு நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராக வேண்டுமா? வேண்டாமா என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி கொடுத்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


 


Tokyo Olympics 2021: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு