விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பயன்பெறும் வகையில் நூலகத்தினை வருவாய்துறை அமைச்சர் KKSSR இராமசந்திரன் மற்றும் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுமான், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் பலர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய போது,
‛‛நூலகம் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைந்ததில் பெருமை அடைகிறேன். நான் துறைக்கு பொறுப்பேற்ற பின் மக்களின் மனதில் மாபெரும் மாற்றம், மற்றும் புரட்சியை ஏற்படுத்துவது நூலகம் என அறிந்தேன். இது துறை கிடையாது. தமிழகத்தில் 12,000 மேற்பட்ட ஊராட்சியில் நூலகம் உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கிழ் அமைந்துள்ளது பெருமையாக கருதுகிறேன். பல்வேறு நவீன வசதிகள் ஆன்லைனில் வந்தாலும் புத்தகம் தான் நமக்கு சிறந்தது. இது பெரிய மறுமலர்ச்சி தரும் என பேசினார். அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே பெரிய நூலகம். திறப்பு விழாவின் போது கலைஞரிடம் நான் வாசகம் கேட்ட போது, புத்தகத்திலே உலகத்தை படிப்போம். உலகத்தை புத்தகமாக்குவோம் என கலைஞர் கூறினார்,’’ என்று பேசினார்.
பின்னர் வருவாய் துறை அமைச்சர்கேகேஎஸ்எஸ்ஆர்., பேசிய போது:
‛‛விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்மையாக மக்கள் தொகை, தொழில் சிறந்து விளங்கும் ஊராக இராஜபாளையம் உள்ளது. 50 வருடத்திற்க்கு முன் பெண்கள் ஆணாதிக்கத்துக்கு கீழ் இருந்தனர். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி முயற்ச்சிக்கு பின் புத்தகம் படித்து சரிசமமாக மாற்றம் வந்துள்ளது.
அனைத்துறைகளிலும் பெண்கள் சரிசமமாக இருந்து வருகின்றனர். வேலை வாய்ப்பு வழங்கும் போது படித்ததில் யார் முதன்மை என பார்ப்பார்கள். குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். ஒரு குடும்பத்தில் பெண் படித்தால் அந்த குடும்பம் சிறக்கும். டீவி சீரியல்கள் பார்ப்பதை தவிருங்கள். மாமியார், எப்படி கொல்ல வேண்டும் என ஒடுகிறது. நாட்டிற்க்கு அறிவு தான் தேவை. நாம் நல்லபடியாக படித்தோம் என்றால் நம் குழந்தைகள் அறிவாக இருக்கும். பேருந்து பயணத்தில் மகளிருக்கு இலவசம் முதல்வர் அரிய சிந்தனையோடு அறிவித்துள்ளார். பெண்கள் பேருந்து பயணத்தில் இலவசமாக சென்று வருவதால் செலவினை குறைக்கும் போது வீட்டின் குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கி செல்வர். பனத்தினை பாதுகாப்பாக சேமிப்பர். இதுவே ஆண்கள் கையில் பணம் மிஞ்சும் போது வேறு வழியாக சிந்தித்து வேறு இடத்திற்கு செல்வார்,’’ என அமைச்சர் பேசினார்