தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது. 


கோவை, சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் ரெய்டு நடந்து வருகிறது.


தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் டார்க்கெட் செய்யப்பட்டனர். அவர்களில் முதலாவதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதன் முதலாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கினார். அவரிடமிருந்து நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது.


அந்தசூடு அணையும் முன், கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அதிமுக முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. விலை உயர்ந்த கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு ரெய்டுகளும் அதிமுக தரப்பிற்கு பெரிய ஷாக் ரெய்டுகளாக இருந்த நிலையில், அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்வு நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.


அதன் படி டெல்டாவில் கோலோச்சிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது நடந்து வரும் இந்த சோதனையில், அவருக்கு சொந்த நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண