Miladi Nabi Holiday in Tamilnadu 2024: மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமைக் காஜி தெரிவித்துள்ளதால் அரசு விடுமுறை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமி பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது மிலாது நபி. இது இஸ்லாமியர்களின் ராபி உல் அவால் மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டு ஹிஜ்ரி காலண்டரின் படி அக்டோபர் 17 ஆம் தேதி மிலாது நபி கடைபிடிக்கப்படுகிறது.


கோலாகலமாக கொண்டாடப்படும் மிலாது நபி: 


பிறை தெரிவது பொருத்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முகமது நபிகளின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் வருகின்றன. முகமது நபி கிறிஸ்துவுக்குப் பின்னர் 570 வது ஆண்டு பிறந்தார்.


அதாவது ராபி உல் அவல் மாதத்தின் 12வது நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. இது இஸ்லாமிய தேசத்தின் பெருங் கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது. மிலாது நபி நாள் நன்றியைத் தெரிவிக்கும் நாளாக. குடும்பங்களும், நண்பர்களும் இணைந்து கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. மக்கள் இந்த நாளில் கோயில்கள், மசூதிகள், தர்காக்களுக்குச் செல்கின்றனர்.



நபிகள் நாயகத்திற்காகவும் அவருடைய போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு நாள் மிலாது நபி/மிலாடி நபி. இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார்.


மிலாது நபியின் முக்கியத்துவம்:


நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயும் நபிகளின் 6 ஆம் அகவையில் காலமானார். பின்னர் முகமது அவர்களின் தாத்தா அவரை வளர்த்து வந்தார். அவரும் அடுத்த சில ஆண்டுகளில் காலமானதால் சிறிய தகப்பனார் முகமது நபியை அரவணைத்து வந்தார்.


சிறு வயதிலியேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கினர். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாது நபி என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.