கட்சி ஆரம்பித்த விஜய்க்கு வாழ்த்துகள்.. வேறு என்ன சொல்ல ? - சூசகமாக பேசினாரா? தயாநிதி மாறன்

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Continues below advertisement

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள், வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துகள் தான் சொல்ல முடியும், என காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். 

Continues below advertisement

கலந்துரையாடல் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள ஓர் தனியார் ஓட்டலில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

திமுகவிற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் எம்பி கலந்துகொண்டு, வருங்காலங்களில் விளையாட்டு மேம்பாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கடந்த 18மாதங்களில் 180க்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்தி விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தியுள்ளதாகவும், வருங்காலங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் விரும்பும் விளையாட்டு போட்டிகளை அதிகளவில் நடத்தி அவர்களை மகிழ்விக்கவுள்ளதாகவும், இதன் மூலம் மக்கள் அதிகளவில் திமுகவிற்கு ஆதரவு தர அதிக வாய்ப்புள்ளதால் அனைவரும் சிறப்பாக ஒருங்கிணைந்து இதனை செயல்படுத்திட வேண்டும் என இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வதாக தயாநிதி மாறன் எம்பி சிறப்புரையாற்றி பேசினார்.

Jayam Ravi Divorce : மனைவி ஆர்த்தியை பிரிந்தார் ஜெயம் ரவி.. ஷாக்கில் ரசிகர்கள்..

விஜய்க்கு வாழ்த்துகள்

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி., திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்ட நோக்கத்தில் தற்போது வரையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது,அதிக போட்டிகளையும், அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது மற்றும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதலளிக்கையில்,

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துகள் தான் சொல்ல முடியும் என கருத்து தெரிவித்தார்.

மூடநம்பிக்கைகள் வேண்டாம்

மேலும் ஆன்மீக சொற்பொழிவுவாளர் மகா விஷ்ணு செயல் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

அறிவியல் பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், மூட நம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்,எழிலரசன் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement