காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தர இறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியது


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இன்று திடீரென மிகப் பெரிய ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


குவிந்த பொதுமக்கள்


இதனை அடுத்து அப்பபகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் குவியத் துவங்கினர். இந்தநிலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் , ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என தெரியவந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சரி செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் 


இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயிற்சி மேற்கொள்ள வந்த ராணுவ ஹெலிகாப்டர் தர இறங்கியுள்ளது. தற்பொழுது இராணுவ ஹெலிகாப்டரை சரி செய்யும் பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் பொதுமக்கள் கூடாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


ஏற்கனவே கடந்த மாதம் சாலவாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.