எம்ஜி ராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா இலங்கையில் இருந்து வெளியேறினார்கள். சத்யபாமா தனது தாயார் சரஸ்வதி உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்து வந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தடையை மீறி ஜல்லிக்கட்டு; தட்டிக்கேட்ட காவலர் மீது கல்வீச்சு - இதுவரை 8 பேர் மீது வழக்குப்பதிவு
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ள யானையடி பள்ளியில் படித்தவர், பாதியிலேயே குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பை தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 2022ஆம் ஆண்டு தொடங்கிய 16 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 75,296 புதிய வாகனங்கள் பதிவு
'
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நீ ஆம்பளயா என்று கேட்டதால் ஆத்திரம் - காதல் பிரச்னையில் காதலனின் நண்பனை போட்டுத்தள்ளிய அண்ணன்
இவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் படித்த பள்ளியான யானையடி பள்ளியில், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்னாசேகர், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதே போல் தஞ்சை ரயிலடியிலுள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, அறிவுடையநம்பி உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கும்பகோணத்தில் மாநகர சார்பில் நகர செயலாளர் ராமநாதன், ஜெபேரவை சார்பில் செயலாளர் அயூப்கான் மற்றும் பாணாதுறையில் கோலப்போட்டிகள் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசுத்தொகுப்பை சாலையில் கொட்டி போராட்டம் - பொங்கல் பண்டிகை முடிந்து பரிசுத்தொகுப்பை வழங்கியதாக புகார்