தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் காளைகளை அடுக்குவது, பாரம் கல் தூக்குவது, கபடி, இசை நாற்காலி, ஓட்டப் பந்தய, கயிறு இழுத்தல், ஊசி நூல் கோர்த்தல், லெமன் ஸ்பூன், உரி உடித்தல், கோலப் போட்டிகள், கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் கிராமப் பகுதியில் நடைபெறுவது வழக்கம். 



தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு, இன்று  கறி நாள்  என்பதால் கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகள், கோழிகளை வெட்டி சமைத்து சாப்பிட்டனர். கொரோனா ஊரடங்கு என்பதால் கிராம மக்கள் அவர்கள் சொந்த பகுதியிலியே பல்வேறு  போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர். 

   
  





இந்நிலையில் தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு வித்தியாசமான முறையில் இளைஞர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் சாப்பிடுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்காக முக்கல்நாய்க்கன்பட்டியில் விழாக் குழு சார்பிலே 15 கிலோ சில்லி சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்களுக்கு, ஒரு டேபிலுக்கு மூன்று பேர் என சமூக இடைவெளியில் அமர்ந்து ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் சில்லி சிக்கனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் வரி பணத்தை தன் பெயரை குறிப்பிடாமல் கோயிலுக்கு தானமாக வழங்கிய பாண்டியர்கள்- கல்லூரி மாணவி ஆய்வில் புதிய தகவல்

அதே போல் அதிகளவு சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது.  இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேவையானளவு பிரியாணி விழாக் குழுவினர் வழங்கினர். இந்த போட்டியில்  முதலில் யார், அதிகளவு  பிரியாணி சாப்பிடுகிறார்களோ, அவருக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கிராம இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு  சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிட்டனர். பொங்கல் விழாவில், ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டாலும், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி மட்டுமே மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போட்டியினை கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.