கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி, இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர் கருணாநிதி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து மடல்:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 100 ஆண்டு இன்று நிறைவு குறித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கலைஞர் பாதையில் பயணத்தை தொடங்குகிறோம். கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை உன்னத தமிழ்நாடாக மாற்றி வருகிறோம். புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர். அதிகாரத்தால் அல்ல, அன்பால் போற்றப்படும் தலைவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். கலைஞர் இருந்த செய்ய வேண்டிய செயலை, அவரது மகனாக இருந்து செய்து வருகிறேன்.இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர் கருணாநிதி
கலைஞர் கண்ட கம்பீர தமிழ்நாட்டை திமுக ஆட்சி உருவாக்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு குறித்து ட்வீட்
இந்த நூற்றாண்டின் தலைவராம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு எனது புகழ்மாலை!#கலைஞர்100 pic.twitter.com/wMICQ9Q9AL
— M.K.Stalin (@mkstalin) June 2, 2024
href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின் முரசொலியில் மடல் எழுதியுள்ளார்.
தலைவரே நீங்கள் நினைத்தீர்களே, நாங்கள் செய்து காட்டி வருகிறோம். நீங்கள் பாதை அமைத்தீர்கள் , நாங்கள் பயணத்தை தொடர்கிறோம். நீங்கள் இயக்குகிறீர்கள், நாங்கள் நடக்கிறோம், உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம், உழைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கலைஞர் 100 நிறைவு நாளையொட்டி, திமுக தொண்டர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பதை வருவதை பார்க்க முடிகிறது.
இதையடுத்து, நாளை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளும் அரசு சார்பிலும் , திமுக கட்சி சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.