தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22, 23 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில்  கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது, இதன் காரணமாக நாளை (20/03/2023) மற்றும் நாளை மறுநாள் (21/03/2023) ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: 


வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை முன்னறிவிப்பு எச்சரிக்கை:


20.03.2023


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


21.23.2023


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


22.03.2023 மற்றும் 23.03.2023 


 தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 


சென்னை நிலவரம்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வாளிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக,மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34-25 டிகிரி செல்சியஸ்அளவில் இருக்கக்கூடும்.


அந்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


இந்த நாட்களில் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.




மேலும் வாசிக்க.


கொரோனா எங்கிருந்து பரவியது? தகவல்களை தர மறுக்கும் சீனா: கடுமையாக சாடிய உலக சுகாதார அமைப்பு..!


Annamalai Speech : "தேர்தலுக்குபின் நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன்" அண்ணாமலை பேச்சு