காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை கிழக்கு - தென் கிழக்கு திசையில் 490 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 


வரும் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என்றும் அப்போது 35 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது