பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் மீரா மிதுன். அந்த நிகழ்ச்சி சர்ச்சைகளால், பரபரப்புக்குள்ளானவர். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார். சூர்யா போன்ற முன்னணி நடிகர்களையே விமர்சனம் செய்து சோஷியல் மீடியா டாக் ஆனார். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் தொடர்ச்சியாக பல பதிவுகளை பதிவிட்டு வரும் நடிகை மீராமிதுன், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




அந்தக் கடித்தில், ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தைச் சேர்ந்த அஜித் ரவி தன்னை தொழில்ரீதியாக வளரவிடாமல் தொல்லை கொடுப்பதாகவும், அவரால்தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தற்கொலை அல்ல, அஜித் ரவி செய்யும் கொலை என்றும் குறிப்பிட்டுள்ளார். அஜித் ரவியின் அமைப்புக்காக வேலை செய்து அழகிப்பட்டம் வென்றேன். அவர் எனக்கு அநீதி செய்தார். அதனால் அவரின் அமைப்பில் இருந்து நான் விலகினேன். தனியாக அமைப்பு தொடங்கினேன். ஆனால் அவர் என்னை வளரவிடவில்லை.  என் பெயரையே கெடுத்துவிட்டார். போலி வழக்குகள் தொடர்ந்தார். அவர் அதிகாரத்தால் பிரச்னை செய்தார். என் புராஜெக்ட்கள் வெளியாவதை தடுக்கிறார். 3 ஆண்டுகளாக என்னை பின் தொடர்கிறார். ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார். நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். தற்கொலை தான் எனக்கான ஒரே வழி. என் முடிவுக்கு அஜித் ரவியே காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்துவிடுவேன். பின்னர் அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும்,. இது கொலை எனக்  குறிப்பிட்டுள்ளார்.





அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். பல சிக்கல்களை தனக்கும் தன் வேலைக்கும் அந்த சேனல் கொடுத்ததாகவும், பல இறப்புகள் அந்த சேனலில் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு ட்வீட்டில், தன்னுடைய தற்கொலை முடிவை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள மீராமிதுன், ''வரலாற்றில் சாதித்த முதல் தமிழ்ப்பெண் காப்பாற்றப்படவில்லை. இது தமிழ்நாட்டின் அவமானம்'' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ''என் தாயும், குடும்பமும் அவர்களால் பிரச்னைக்கு உள்ளானது. என் தந்தை இறப்பே அவர்களால் நடத்தப்பட்ட கொலைதான். தந்தை அருகே இருந்தபோது யாரும் எனக்கு தொல்லை கொடுக்கவில்லை. தந்தையின் மரணத்துக்கு பிறகு அவரில்லாமல் துயரப்படுகிறேன். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பல ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்


அடுத்தடுத்த ட்வீட்கள் மூலம் மீராமிதுன் தொடர்ந்து பல கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அவரது ட்வீட்களில் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினையும், பிரதமர் மோடியையும் டேக் செய்து வருகிறார்.






பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!