காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு




 


மாயனூர் கதவணைக்கு  வினாடிக்கு, 16 ஆயிரத்து, 518 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 16 ஆயிரத்து, 722 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஆற்றிலிருந்து, 15 ஆயிரத்து, 402 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 




அமராவதி ஆற்றில் கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் 466 கன அடி தண்ணீர் வந்தது.


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு, 2 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.




க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப் பாளையம் அணையில் 26.10 அடியும், பொன்னனியாறு அணையில் 27.97 அடியும் நீர் உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணராயபுரத்தில், 1 மி.மீ., மழையும், மாயனூரில், 6 மி.மீ., மழையும் பதிவானது.