ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
இந்நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி நடைமேடை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருவதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு 09.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் நேற்று இரவு 11.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டது.
மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும்
சமயநல்லூர் அருகே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற இயலாததால் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும். அதே போல மதுரை - செகந்திராபாத் (கச்சிகுடா) வாராந்திர விரைவு ரயில் (07192) நவம்பர் 30 அன்று 45 நிமிடங்கள் தாமதமாக காலை 06.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால் தற்போது மதுரை - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 30 அன்று மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டோல் பிரச்னை ; இனி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி வாகனங்களில் பயணிக்கலாம் - அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க - மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்: கருத்தரங்கு நடத்தும் காவேரி கூக்குரல்! விபரம் உள்ளே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்