காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 13 ஆயிரத்து, 548 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13 ஆயிரத்து, 761 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 12 ஆயிரத்து, 941 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 192 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 616 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 117 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 78.45 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.90 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரத்தில் 61.2 மி.மீ., கொட்டியது.
கரூர் மாவட்டத்தில் இரவு தொடங்கி, அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக, கிருஷ்ணராயபுரத்தில் 61.2 மி.மீ., மழை பெய்தது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த 8ல் அறிவித்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
கரூர், 49.0, அரவக்குறிச்சி, 9.6, அணைப்பாளையம், 10.3, க.பரமத்தி, 22.0, குளித்தலை, 6.0, தோகைமலை, 4.2, கிருஷ்ணராயபுரம், 61.2, மாயனூர், 21.0, பஞ்சப்பட்டி, 120.0, கடவூர், 26.0, பாலவிடுதி, 37.1, மயிலம்பட்டி, 80.0 ஆகிய அளவுகளில் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 33.18 மி.மீ., மழை பெய்துள்ளது.