மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. 1947க்குப் பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை.
நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்.
டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்ஸேனாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு. துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து அனில் பைஜால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் நடவடிக்கை.
ஐபிஎல் 2020 குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் சென்று வந்தவர்கள் தகவல் தரவேண்டும்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறைச் செயலர் கடிதம்.
பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான ‘ஜன கன மன’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸிலும், விஜய் சேதுபதியின் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் வெளியாகிறது.
‘நெஞ்சுக்கு நீதி ‘ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் கைப்பற்றியிருப்பதாகவும் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்.
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது; பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
மதுரை மாநகராட்சி அம்மா உணவகத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
சென்னையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக இதுவரை 3,926 வழக்குகள் பதிவு. தலைக்கவசம் அணியாததற்காக 1,903 வழக்குகளும், பின் இருக்கையில் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 2,023 வழக்குகளும் பதிவு.
காஷ்மீரின் பாஹல்கம் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற 'குஷி' திரைப்பட படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு காயம்.