மசினகுடியில் யானைக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


கடந்த 2021ஆம் ஜனவரி மாதம் மசினகுடியில் காட்டு யானை மீது ஏரியும் டயரை வீசிக் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் பகுதியில் 2021 ஜனவரி 4ஆம் தேதி இரவு உணவு தேடி வந்த காட்டு யானை மீது சிலர் டயரைக் கொழுத்தி வீசினர். உடலில் பற்றிய தீயுடன் பிளிறியபடி காட்டுக்குள் யானை ஓடிய வீடியோ காட்சிகள் வெளியானத் தொடர்ந்து இந்த விஷயம் வெளியே தெரிந்தது. நாடு முழுவதும் வைரலான வீடியோ பார்த்த மக்கள் இதற்கு முக்கிய காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொதிப்புடன் கூறினார்கள். 


நெருப்புடன் யானையின் வீசிய டயரால், யானைக்கு காது உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு, புண் சீழ்பிடித்ததால் யானைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க அதனை லாரியில் அழைத்துச் சென்றனர். அப்போது யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது. உயிரிழந்த யானையை காப்பற்ற முடியாமல் அதன் தும்பிக்கையை பிடித்தவாறு வனத்துறை அதிகாரி ஒருவர் கண்ணீர் சிந்தியது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்தது.




யானையை கொன்றவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தங்களின் விடுதி அருகே யானை அடிக்கடி வந்து தொந்தரவு செய்ததால், அதன் மீது கொளுத்திய டயரை வீசியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான  ரிக்கி ராயா ஓராண்டு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், இன்று அவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து, அவர் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண