தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள சிவசங்கர் மாஸ்டர் பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள பிரபல நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியான தகவல்கள் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்திய திரைப்பட நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை  போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது. நடன இயக்குநர் மட்டுமின்றி சிவசங்கர், கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு , பாலாவின் வரலாற்று படமான பரதேசி ஆகிய படத்தில் நடித்துள்ளார். சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு,  சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களிலும் நடிகராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்.






இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்புக்கு,


அஜய் கிருஷ்ணா (மகன்)


98403 23415