1. ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வெளிபட்டணம் செல்லபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த காயாம்பு மகன் ராஜா என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் ரூ.33 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

2. ராமநாதபுரத்தில் கனமழை காரணமாக இன்று 25.11.21 (ஒரு நாள் மட்டும்) பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

 

3. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரியில் இருந்து கீழ வடகரை, மேல வடகரை கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது நிர்வாக இயக்குநருக்கு யூனியன் சேர்மன் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்.

 

4. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவிகள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது.


 

5. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து நகர் காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.




 

6. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் ரூ.3.5 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

7. கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் 55, வாகனம் மோதி பலியான வழக்கில், வேன் ஓட்டுநர் சுரேஷ், திண்டுக்கல் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.

 

8.மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனை கிராமத்தில், 13-ம் நூற்றாண்டு பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பாதாள ரகசிய அறைதிறக்கப்பட்டது. அதில் பழங்கால சிலைகள் உள்ளிட்ட 21பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இடையே  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

9. ராமநாதபுரம் திணைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தை திருச்சி NIT நிபுணர்கள் ஆய்வு செய்த பின் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு.

 

10.கீரனூர் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவும் கோரி வழக்கில் மேலூர் வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.