ஒற்றை முறை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து செயல்படும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை, மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

Continues below advertisement

மாநிலம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதற்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதன் மூலமும் மாநிலம் பன்முக அணுகுமுறையை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும்.

Continues below advertisement

குறிப்பாக, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB). ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் பங்களிப்பைச் செய்த முன்மாதிரியான பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணைய தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1) விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

2) விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.01.2026.