மரணத்தில் விளிம்பு வரை சென்று இளைஞர் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலை விதிகளை அனைவருமே முறையாக கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும் என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.


சாலை விபத்துகள் என்ற செய்தி இல்லாத நாளே இல்லை. காலை விடிந்தாலே ஒரு சாலை விபத்து என்பது என் காதுகளில் கேட்டுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. சாலை விபத்தை தடுக்க வேண்டுமென்றால் அனைவருமே கவனமுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம். யாரோ ஒருவரின் கவனக்குறைவு கூட பெரிய சாலை விபத்துக்கு வழியாகிவிடும். அப்படியான ஒரு கவனக்குறைவால் பெரிய விபத்து ஏற்பட இருந்ததும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து இளைஞர் ஒருவர் உயிர்பிழைப்பதும் கண் முன்னே வீடியோவாக கிடைத்துள்ளது. 




மங்களூருவில் நடந்த இந்த சம்பவம் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பேருந்து மெதுவாக வந்து நடு ரோட்டில் அதுவும், வளைவுப்பகுதியில் யூ டர்ன் அடிக்கிறது. அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவரும் வருகிறார். வளைவு என்பதால் பேருந்து குறித்து அந்த இளைஞருக்கு தெரியவில்லை. பேருந்தை அருகில் பார்த்ததும் அவரால் பிரேக்கும் அடிக்க முடியவில்லை. அதனால் பைக் போகும் திசையில் அவரும் போகிறார். அந்த வீட்டில் சுவருக்கும், நடுவே இருந்த ஒரு மரத்துக்கும் இடையே அந்த பைக் புகுந்து செல்கிறது. அதிவேகம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து அந்த பைக் செல்வது தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் மரத்துக்கு இடையே சென்றதால் உயிர் பிழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






வளைவில், அதுவும் நடுரோட்டில் பேருந்தை சர்வ சாதாரணமாக பேருந்து ஓட்டுநர் யூ டர்ன் அடித்ததும்,  அதேபோல தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத அளவுக்கு பைக்கை அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்ததுமே இந்த சம்பவத்துக்கு காரணமாக தெரிகிறது. சாலை விதிகளை அனைவருமே முறையாக கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும் என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?


Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..