மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 




CM Inspection In Mettur Dam : திறக்கப்பட்ட மேட்டூர் அணை.. டெல்டாவில் ஆய்வுக்காகப் புறப்பட்ட முதலமைச்சர்.. முழு விவரம்..


மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று முத்துக்குமாரசாமிக்கு கீர்த்திகை வழிபாடு நடைபெறும். குறிப்பாக  வைகாசி மாதம் நடைபெறும் கார்த்திகை வழிபாடு, மண்டலாபிஷேக கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது. 




UPSC Final Result 2021: யூபிஎஸ்சி 2021 தேர்வு முடிவுகள் வெளியாகின; முதல் 3 இடங்களைப் பிடித்த பெண்கள்- முழு விவரம்


மண்டலாபிஷேக கார்த்திகையை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர்,  இளநீர், திரவியம், மஞ்சள்,  சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.




TaraAir : சிதறிக் கிடக்கும் உடல்கள்... 14 சடலங்கள் மீட்பு... 8 சடலங்களை தேடும் பணி தீவிரம்... நேபாள விபத்து அப்டேட்!


இதில் தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி  குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, செல்வமுத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் ஆலய வெளிப் பிரகார வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் வீதி உலா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு வீதி உலா நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற