நாளுக்கு நாள் வனவிலங்குகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், வனப்பகுதிகள் வாகனங்கள் வேகமாக செல்லும்போது சாலையை கடக்கும் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகி அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படுகிறது.
கடந்த வருடம் கேரளாவில் யானைக்கு அண்ணாச்சி பழம் கொடுத்து வெடி வைத்த சம்பவம், நீலகிரியில் யானையின் மீது பெட்ரோல் ஊத்தி எரித்தல், மதுரையில் மாடுகளின் மீது கொதிக்கும் எண்ணெய் மற்றும் ஆசிட் அடித்தல் போன்ற கொடூர சம்பவங்களில் கொடூர மனிதர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 1960 ம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை கண்காணிக்கவும், வழிமுறைகளை பின்பற்றவும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.
இந்தநிலையில், நீலகிரியில் உடல் நலம் சரியில்லாத காட்டெருமையை மர்மநபர் ஒருவர் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காயமடைந்த நிலையில் உள்ள காட்டெருமையை ஒரு நபர் இரக்கமின்றி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, இந்த வீடியோ தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டி என்ற சிறிய நகரத்தில் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், அந்த நபர் காயமடைந்த விலங்கை கட்டையால் கொடூரமாக அடிப்பதைக் காண முடிந்தது. விலங்கு தன்னைத் தானே தற்காத்து கொள்ள போராடிய காட்சி கண்களை குளமாக்கியது .
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்